Show all

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் முதல் சீக்கியர்! செய்தி தொகுப்பாளர் பணியில்

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சாகேசர் நகரில் வசித்து வருபவர் ஹர்மீத் சிங்.  இவர் கராச்சி நகரில் உள்ள மத்திய உருது பல்கலை கழகத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

ஊடகத்தில் ஒரு நிருபராக பணியை தொடங்கிய சிங், பப்ளிக் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளர் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார்.  பாகிஸ்தானில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளர் பணியில் சேரும் முதல் சீக்கியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இதுபற்றி சிங் கூறும்பொழுது, பாகிஸ்தானில் வளர்ச்சி அடைந்து வரும் ஊடக தொழிலில் பணியாற்றுவதற்கு எப்பொழுதும் ஆர்வமுடன் இருந்தேன்.  இந்த துறையில் பலன் பெற வேண்டும் என்பதற்காக, எனது மத அடையாளத்தினை நான் பயன்படுத்தவில்லை.  எந்தவொரு அங்கீகாரத்தினையும் பெறுவதற்கு முன் நான் கடுமையாக உழைத்துள்ளேன்.  அதற்காக நிறைய பணிகளை செய்துள்ளேன் என கூறி உள்ளார்.

அண்மையில் மன்மீத் கவுர் என்பவர் பாகிஸ்தானில் முதல் பெண் சீக்கிய நிருபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.