Show all

அமெரிக்க அதிபருக்கு தவறான அழைப்பு செய்து கலாய்த்த நபர்! கேளொலி: இணையத்திற்கு நைட்ரச ஆக்சைடு

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க அதிபர் டிரம்பை நகைச்சுவையாளர் ஒருவர் பேசியில் அழைத்து கலாய்த்துள்ளார். அதிபர் கலாய்க்கப்பட்ட கேளொலி இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. உலகிலேயே அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வரும் அமெரிக்க அதிபரை, பல அடுக்கு பாதுகாப்பைத் தாண்டி அவரை சீண்டி இருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் மேலேன்டேஸ் என்ற நகைச்சுவையாளர். அமெரிக்க அதிபரை பேசியில் அழைத்து, பிரபா ஒயின் ஷாப் உடைமையாளரா என்பது போல, அமெரிக்க அதிபரை கலாய்த்துள்ளார். அமெரிக்காவில் ஜான் மேலேன்டேஸ் பேசியில் அழைத்து கலாய்ப்பதில் வல்லவர். ஸ்டேட்டரிங் ஜான், என்ற நிகழ்ச்சியில் இவர் பேசியில் அழைத்து கலாய்ப்பார். 

ஆனால் சாதாரண பிரபலங்களை கலாய்க்காமல் கொஞ்சம் பெரிய நபர்களை தேடிப்பிடித்து பேசுவார். 

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபரை கலாய்க்க நினைத்து கலிபோர்னியா செனட்டர் பாப் பேசுவதாக பொய் சொல்லி, அதிபரின் எண்ணுக்கு அழைக்க முயன்றுள்ளார். 

முதலில், உண்மையாகவே ஜான் பேசுவதாக கூறியுள்ளார். ஆனால் வெள்ளை மாளிகையில் அதிபருடன் அழைப்பு இணைப்பை ஏற்படுத்த மறுத்ததால், இரண்டாவது முறை செனட்டர் பேசுவதாக பொய் சொல்லியுள்ளார். இரண்டாவது முறை டிரம்ப்பின் உறவினர் ஒருவர் பேசியை எடுத்து பேசிவிட்டு வைத்துள்ளனர். அதன்பின் சில நிமிடங்களில் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ பேசியில் இருந்து ஜானை திரும்ப அழைத்துள்ளார். இந்த அழைப்பு மொத்தம் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தனது நிகழ்ச்சியில் ஜான் வெளியிட்டுள்ளார். 

என்ன டிரம்பும், செனட்டர் பாப்பும் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள். கொள்கை ரீதியாக இருவரும் ஒரு மாதிரியானவர்கள். இதுகுறித்து இருவரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் பேசியது ஜான் என்று தெரியாமல் டிரம்ப் கடைசி வரை பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இந்த கேளொலி பதிவு தற்போது இணையம் முழுக்க பரவி, நைட்ரச ஆக்சைடாக செயல்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.