Show all

எந்த நாட்டுக் குடிமகனை, உலகின் 190 நாடுகள், தங்கள் நாட்டின் நுழைவு அனுமதியில்லாமலே, அனுமதிக்கின்றன தெரியுமா?

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் ஆக சக்திவாய்ந்த எல்லைக்கடவு என்னும் சிறப்பை சிங்கப்பூரிடம் இருந்து ஜப்பான் தட்டிப் பறித்துள்ளது. இவ்வாண்டுக்கான ஹென்லி எல்லைக்கடவு குறியீட்டில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஹென்லி மற்றும் பங்காளிகள் நிறுவனம் நேற்று தெரிவித்தது. 

ஜப்பான் எல்லைக்கடவு வைத்திருப்போர் இம்மாதத் தொடக்கத்தில் இருந்து மியன்மாருக்கு நுழைவுஅனுமதி இன்றி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நுழைவுஅனுமதி இன்றி அல்லது வருகை நுழைவுஅனுமதியில், ஜப்பானியர் செல்லக் கூடிய இடங்களின் எண்ணிக்கை 190க்கு உயர்ந்தது. அதன் காரணமாக, இந்த வசதியை 189 இடங்களுக்குப் பெற்று குறியீட்டின் முதலிடத்தில் இருந்து வந்த சிங்கப்பூர் இரண்டாம் இடத்துக்கு இறங்கிவிட்டது. 

ஊலகின் மொத்த நாடுகளே 195தாம் அவைகளில் 190 நாடுகளுக்கு நுழைவு அனுமதி இல்லாமல் ஜப்பான் எல்லைக்கடவை வைத்துக் கொண்டு செல்ல முடியும்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இவ்விரண்டு நாடுகளும் ஒன்றுக் கொன்று சரிசம போட்டியில் இருந்ததாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது. குறியீட்டில் இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஜெர்மனி மூன்றாம் இடத்திற்கு இறங்கி தென்கொரியா, பிரான்ஸ் ஆகிய வற்றின் குறியீட்டோடு இணைந் தது. பட்டியலின் நான்காம் இடத்தில் டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, சுவீடன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. அவற்றின் குடிமக்கள் நுழைவுஅனுமதி இன்றியோ வருகை நுழைவுஅனுமதியிலோ செல்லக் கூடிய இடங்களின் எண்ணிக்கை 187. இந்திய எல்லைக் கடவை வைத்துக் கொண்டு 58 நாடுகளுக்கு மட்டுமே நுழைவு அனுமதி இல்லாமல் செல்ல முடியும்.

எந்த நாட்டுக் குடிமகனை, உலகின் 190நாடுகள், தங்கள் நாட்டின் நுழைவு அனுமதியில்லாமலே, அனுமதிக்கின்றன. தெரிந்து கொண்டீர்களா? முதலிடத்தில் ஜப்பான் குடிமகனும் இரண்டாமிடத்தில் சிங்கப்பூர் குடிமகனும் இருக்கின்றனர்தானே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.