Show all

ஆட்சியைக் கவிழ்த்த டீசல் பெட்ரோல் விலையேற்றம்!

டீசல் பெட்ரோல் விலையேற்றத்தின் எதிர் விளைவாக ஆட்சியைக் கவிழ்த்த கஜகஸ்தான் மக்களுக்கு உலக அளவில் பாராட்டு குவிந்து வருகிறது. 

23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின் போராட்டத்திற்குப் பணிந்த அந்நாட்டு தலைமைஅமைச்சர் அஸ்கர் மாமின், தனது தலைமைஅமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ளார். 

அனைத்து விலையேற்றங்களுக்கும் அடிப்படையானது டீசல் மற்றும் பெட்ரோல் விலையேற்றம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உலகறிந்த செய்தி! இந்த நிலையில்- டீசல் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தின் எதிர் விளைவாக ஆட்சியைக் கவிழ்த்த கஜகஸ்தான் மக்களுக்கு உலக அளவில் பாராட்டு குவிந்து வருகிறது. 

ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமான அந்த நாட்டின் டீசல் விலை என்ன தெரியுமா? நமது நாட்டு ரூபாய் மதிப்பில் 42.67 அந்த நாட்டுச் செலாவணியான கேஇசட்டியில் 249.60 ஆகும்.

இந்த வகைக்கும் புதிய தலைமைஅமைச்சர் அறிவாளராகவும் பண்பாளராகவும் அமைந்திடவும் நமது வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,121.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.