Show all

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா

பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதன் ஆறு நாடுகள் கலந்துகொண்டுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் ‘ஏ’ பிரிவிலும், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’  பிரிவிலும் உள்ளது. 

இத்தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் நேற்று துபாயில் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சைத்  தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 127(120) ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னாள் கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங் அணியின் சார்பில் அதிகபட்சமாக கின்சிட் ஷா 3 விக்கெட்டுகளும், கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. ஹாங்காங் அணி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் றன் குவிக்க தவறியதால் இறுதியில் ஹாங்காங் அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஹாங்ஹாங் அணையில் அதிகபட்சமாக நிஷாகட் கான் 92 (115) ரன்களும், கேப்டன் அன்சுமான் ராத் 73(97) ரன்களும் குவித்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சாஹல், கலீல் அஹமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியா தனது இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்ள உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.