Show all

உலகிலேயே அதிகம் மீன் பிடிக்கும் நாடு சீனாவாம்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி உள்நாடு மற்றும் வெளிநாட்டு எல்லைகளில் மீன் பிடிக்கும் எண்ணிக்கையில் சீனா அதிகப் படகுகளுடன் முதல் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசியா முழுவதும் சுமார் 3.5 மில்லியன் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சீனாவில் மட்டும் 1.07 மில்லியன் படகுகள்  பயன்படுத்தப்படுகின்றன. அங்கு மோட்டார் படகுகள் மட்டும் 6,86,766  உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து இந்தோனேஷியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பெரு, இந்தியா, வியட்னாம், மியான்மர், நர்வே போன்ற நாடுகள் உள்ளன.

இதன் மூலம் சீனர்கள் அதிகமாக மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உட்கொள்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,837.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.