Show all

சீனாவில் சிறுவர்கள் இரவு நேரங்களில் இணையம் பயன்படுத்த தடை

சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாவதை தடுக்க இரவு நேரங்களில் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து அந்நாட்டு சைபர்ஸ்பேஸ் துறையினர் சிறுவர்கள் இரவு நேரங்களில் ஆன்லைன் விளையாட்டு விளையாடத் தடை விதித்துள்ளது. சிறுவர்கள் இணையத்துக்கு அடிமையாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் இணையதள தகவல் மையம் அளித்த தகவலில், சீனாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 23விழுக்காட்டினர் 18 அகவைக்கு கிழ் உள்ளவர்கள் என்று கூறியுள்ளது. சீனாவில் இளைஞர்கள் இணையத்துக்கு அடிமையாகி வருவது குறித்து சீன வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, சீனாவில் இணையத்துக்கு அடிமையானவர்களுக்கு என சீர்திருத்த மையங்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது. இந்த மையங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்து வருகிறது. இது சீன இளைஞர்களின் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார். சீனாவில் இந்தத் தடைக்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்தாலும். ஆன்லைன் விளையாட்டுக்கு நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.