Show all

அமெரிக்காவை முந்திய சீனா! பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம்

உலகப் பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்திற்கு வந்துள்ளது.

30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் பட்டியலை மெக்கின்ஸ்க்கி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 20 ஆண்டுகளில் உலக செல்வ வளம் மும்மடங்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

உலகின் 60 விழுக்காட்டு வருவாயை கொண்டுள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் 7 டிரில்லியன் டாலர்களாக இருந்த சீனாவின் பொருளாதார வளம், தற்போது 120 டிரில்லியன் டாலர்களாக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. மற்றொரு புறம், அமெரிக்காவின் பொருளாதார வளமும்  90 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

இவ்விரு நாடுகளிலும் மூன்றில் இரண்டு பங்கு செல்வத்தை அந்நாட்டின் பெரும் பணக்காரர்களே வைத்துள்ளனர். மனைத்துறை பேரளவாக வளர்ச்சி அடைந்துள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,069.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.