Show all

கண்டறியப்பட்டது! எப்படி வந்தது கொரோனா நுண்ணுயிரி? பாம்புகறி மூலம் பரவியதாம்.

கொரோனா நுண்ணுயிரிக்கு பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் நுண்ணுயிரி புள்ளியாக செயல்பட்டன. கொரோனா நுண்ணுயிரி பரவ  மிகவும் சாத்தியமான விலங்கு, நீர் பாம்பு என்றும் தெரியவந்து உள்ளதாக  மருத்துவ நுண்ணுயிரியல் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. 

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் உவான் நகரில் உள்ள  கடல் உணவு சந்தை கொரோனா நுண்ணுயிரி உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் மூடிமுத்திரை வைக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உவான்  நகரில் இருந்துதான் கொரோனா நுண்ணுயிரி பரவத் தொடங்கியது. கொரோனா நுண்ணுயிரி தாக்குதலைத் தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய நுண்ணுயிரி உவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்) நம்புகின்றனர்.

பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் போக்குகளின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா நுண்ணுயிரிக்கு பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் நுண்ணுயிரி புள்ளியாக செயல்பட்டன. கொரோனா நுண்ணுயிரி பரவ  மிகவும் சாத்தியமான விலங்கு, நீர் பாம்பு என்றும் தெரியவந்து உள்ளதாக  மருத்துவ நுண்ணுயிரியல் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.