Show all

தமிழகத்திலும்- நடுவண் பாஜக அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்! இன்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியீடு

தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் வடஇந்தியக் கூலி தொழிலாளர்கள், வடஇந்தியக் கட்டுமான தொழிலாளர்கள் குடும்ப அட்டைப் பொருட்களுக்காக  முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை பாஜக நடுவண் அரசு கொண்டு வந்துள்ளது.

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், இன்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தலைமைஅமைச்சர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த குடும்ப அட்டைகள் பொருள் வணிகக்  கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.

தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் வடஇந்தியக் கூலி தொழிலாளர்கள், வடஇந்தியக் கட்டுமான தொழிலாளர்கள் குடும்ப அட்டைப் பொருட்களுக்காக  முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை பாஜக நடுவண் அரசு கொண்டு வந்துள்ளது.

இந்தத் திட்டம், தமிழகம் முழுவதும் எளிமையாக வடஇந்தியர்கள் குடியேற வாய்ப்பு அமைத்துத் தரும் திட்டமாகும். சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராகும் அவலத்தைத் தோற்றுவித்து, எதிர்காலத்தில் தமிழர்களுக்கு ஆபத்தை உருவாக்குவதில் மிகச்சிறந்த திட்டமாக இது அமையும். வடஇந்தியர்களை அதிகம் தமிழகத்தில் குடியேறவிட்டால் தமிழகத்தில் தாமரை எளிதாக மலரச் செய்யலாம் என்ற நோக்கில் இந்தத் திட்டத்தை பாஜக முன்னெடுக்கிறது. தமிழகமண்ணில் அயலவர் ஆக்கிரமிக்கும் இது போன்ற தொடர் உபாயங்கள் மூலம், உலகம் முழுவதும் காலம்காலமாக தமிழன் இப்படித்தான் பெரிய நிலப்பரப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிய நிலப்பரப்பிற்கு குறுக்கப்பட்டு வந்திருக்கிறான்.
 
நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நடுவண் நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இன்னும் ஆறு மாதங்களுக்குள் நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, ஆங்கிலப் புத்தாண்டில் 12 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் இன்று முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் தமிழர்கள் எளிதாக இடம் பெயருகிறவர்கள் என்ற போதும் கூட, தமிழகத்தை காட்டிலும் இந்தியாவில் எந்த மாநிலமும், வேலைவாய்ப்பு அளிப்பதில், தொழில்வாய்ப்பு அளிப்பதில், முன்னேற்றத்தில் பின்தங்கியே இருக்கிற நிலையில், தமிழர்கள் யாரும் இந்தியாவிற்குள் இடம் பெயருகிற முயற்சியை முன்னெடுப்பதில்லை. அதனால், தமிழக அளவில் மட்டுமே எப்போதும் இடம் பெயரும் தமிழர்களுக்கு தமிழக அளவில் இந்தத் திட்டம் மிக மிகச்சிறிய பயனாக அமையும். 

ஆண்டு முழுவதும் நாடோடியாக, அணிஅணியாக, தமிழகத்தை நோக்கி படையெடுக்கும், வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் வடஇந்தியக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரும் பயன்பாடாக அமையும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.