Show all

ரிலையன்ஸ் புத்தாற்றல் சூரிய வரை! ஆர்இசி சூரியத் தகடு நிறுவனத்தின் நூறு விழுக்காட்டுப் பங்குகளை வாங்கியுள்ளது

அடுத்த பத்தாண்டுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கரிம மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்து வருவதாகத் தெரிவிக்கிறது.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சூரிய மின்கலன் மற்றும் சூரியத் தகடு உற்பத்தி நிறுவனமான ஆர்இசியின் ரூ.5500 கோடி விலையில் நூறு விழுக்காட்டு பங்குகளை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் புத்தாற்றல் சூரிய வரை (ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட்) சீனாவைச் சேர்ந்த சீனா ஒன்றிய புளூஸ்டார் நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் ஆர்.இ.சி சூரிய மின்கலன் சூரியத் தகடு நிறுவனத்தின் 100 விழுக்காட்டுப் பங்குகளை 771 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 5,500 கோடி ரூபாய்) மதிப்பில் கையகப்படுத்தியிருப்பதாக ஒன்றியப் பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது.

நார்வேயில் தொடங்கி தற்போது சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆர்இசி நிறுவனமானது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய மின்கலன் மற்றம் சூரியத் தகடு உற்பத்தியில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சூரியத் தகடுகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாகவும், நீண்ட காலத்துக்கு உழைக்கும் தன்மையும் கொண்டிருப்பவை.

முன்னதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்ப்ரி தொழில்நுட்ப நிறுவனத்தில் ரிலையன்ஸ் 144 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. நீண்ட கால ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கு அம்ப்ரி தொழில்நுட்பம் காப்புரிமை பெற்றுள்ளது, இந்த ஆற்றல் சேமிப்பு அமைப்பை பவர் கிரிட்டுடன் இணைக்கலாம், இதற்கு குறைந்தபட்ச பராமரிப்பு தான் தேவை, மேலும் பலவிதமான தட்பவெப்ப நிலைகளில் இது தாக்குப்பிடிக்கும் என்பது சிறப்பாகும்.

அடுத்த பத்தாண்டுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கரிம மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்து வருவதாகத் தெரிவிக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.