Show all

இணையரை சலுகைகள் மூலம் ஊக்குவிக்கிறது சீனா! மூன்றாவது குழந்தையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று

சீன இணையர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மாநில அரசுகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை ஈடுகட்ட சீன இணையர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு மூன்று  மாதங்களுக்கு முன்ப அறிவித்தது.

சீன இணையர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மாநில அரசுகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற இணையருக்கு அதிகரித்த விடுமுறையை முன்னிலைப்படுத்தும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மிகக் கட்டாயமான வரிகளை தவிர மற்ற வரிகளைக் குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.