Show all

ரோகிங்கியோ அகதிகளுக்காக ஒரு தீவை தயார்படுத்தும் வங்கதேசம்

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோகிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், வங்கதேச கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு இந்த அகதிகள் மாற்றப்பட இருக்கின்றனர். 

வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த பனிரெண்டு ஆண்டுகளாகத் தென்படுகிறது இத்தீவு. இந்தத் தீவு இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக சொல்லப் படுகிறது. 

தற்போது, இத்தீவுப்பகுதியில் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா விரைவில் திறந்து வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இப்படியொரு திட்டத்தை வங்கதேசம் முன்வைத்த போது மனித உரிமை அமைப்புகள் கடுமையான எதிர்ப்பினை பதிவுச்செய்திருந்தன. அதையும் மீறி, இத்தீவை மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த தீவாக மாற்ற தீவிரம் காட்டிய வங்கதேசம், அதற்காக 280 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருந்தது.

இந்தத் தீவுப்பகுதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் குடியேற்றப்படவுள்ளனர். மியான்மர் நாட்டை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் 1 லட்சம் அகதிகள், அடுத்த மாதம் முதல் படிப்படியாக இங்கு குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது. முதல்கட்டமாக, அடுத்த மாதம் 50 முதல் 60 ரோஹிங்கியா குடும்பங்கள் இங்கு குடியேற்றப்படுவார்கள் எனக் கூறியிருக்கிறார் பேரிடர் மேலாண்மை அதிகாரியான ஹபிபுல் கபிர் சவுத்ரி. 

கடல் மட்ட அதிகரிப்பால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் வங்கதேசம், கடுமையான புயல்களையும் மோசமான வானிலைகளையும் எதிர்கொள்கின்றது. கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பாஷன் சர் தீவை சுற்றியுள்ள கடலோர பகுதியிலேயே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.

இவற்;;றையெல்லாம் தாண்டி பாஷன் சர் தீவை ரோகிங்கியோ மக்கள் தக்கவைத்துக்; கொள்ள இயற்கை வாய்ப்;;பளிக்க வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.