Show all

கெட்ட வாடை வீசியதாம்; உடலிலிருந்தா! மனதிலிருந்தா? விமானத்தில் இருந்து யூத இணையர் வெளியேற்றம்

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உடலில் இருந்து கெட்ட வடை வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததால் யூத இணையர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள சவுத் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் யோச்சி அட்லர் (37). இவரது மனைவி ஜென்னி (31). யூத இணையரான இவர்கள் விடுமுறையை கழிக்க மியாமிக்கு தனது 19 மாத பெண் குழந்தையுடன் வந்திருந்தனர். அங்கிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டெட்ராய்டு நகருக்கு புறப்பட்டனர். விமானத்தில் ஏறி இவர்கள் அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் கட்டாயப்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அட்லரின் உடலில் இருந்து கெட்டவாடை வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததாகவும் அதனால் அவர்கள் இறக்கி விடப்பட்டதாகவும் விமான நிர்வாகம் கூறியது. 

ஆனால் இன விரோதம் காரணமாக தாங்கள் கீழே இறக்கி விடப்பட்டதாக அட்லர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.