Show all

சவூதி அரேபியாவில் ஹிந்துக்கள் பலர் பணி நீக்கம்! பாஜக பேரறிமுகரின் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சின் எதிர்விளைவு

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகளில் ஹிந்துக்கள் பணிநீக்கம் போன்ற எதிர்விளைவுகள் அப்பாவிகளை பாதித்து வருகிறது.

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முகம்மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாக பேசிய நிலையில் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த ஹிந்துக்கள் கட்டாய விடுப்பும், பணிநீக்கமும் செய்யப்பட்டு வருகின்றனர்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் ஷர்மா முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும் முகம்மது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பேரறிமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். 
இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே சவூதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஹிந்துக்கள் பணி நீக்கமும் கட்டாய விடுப்பும் செய்யப்படுவதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்த 7 பேருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதாக உடன்; இந்திய ஊழியர் தெரிவித்துள்ளார். அதேபோல், அங்கு தச்சர் வேலை செய்து வரும் இந்தியருக்கு தான் வழங்கிய பங்களிப்பை களைவு செய்துவிட்டதாக அரபி ஒருவர் கீச்சுவில் பதிவிட்டு உள்ளார். பாஜக பேரறிமுகரின் சர்ச்சை பேச்சால் இதுபோல் அப்பாவி ஹிந்துக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,271.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.