Show all

அடப்பாவிகளா! ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி போலி மருந்துகள் விற்பனையா

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 மக்களின் நோய்களைத் தீர்க்க உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்படும் இவை ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

அவ்வாறு விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரையில் 10 விழுக்காடு போலியானவை அல்லது நம்பகத்தன்மை இல்லாதவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சார்பில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறை கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5115ல் (2013) நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது சர்வதேச அளவில் 3 கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை பதிகை செய்தது. அப்போது 1500 தயாரிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முடிவில் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளின் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டுடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பொதுமக்களின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெட்டியாக ஊரைச் சுற்;றும் மோடி இது போன்ற விசயங்களில் தலையிட மாட்டாரா என்று கருத்துப் படம் போடுகிறார்கள் இணைய ஆர்வலர்கள்.

- தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,621

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.