Show all

குழந்தை பிறக்கும் போதே வெளிநாட்டுக் கனவுடன் பிறக்கிறது! மாதாபர் கிராமம் உலகிலேயே பணக்கார கிராமமாகத் திகழ்கிறது

மாதாபர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 65விழுக்காட்டினர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான். இவர்கள் தங்கள் கட்டுமானக் கலைத்திறத்தால், வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே பணக்கார கிராமமாகத் திகழ்கிறது, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாதாபர் கிராமம். இது ஒரு கட்டுமானக் கலை கிராமம். மும்பை திரையுலகக் கலைஞர்கள் கோடிகோடியாகச் சம்பாதிப்பது போல இந்த மண்ணில் கட்டுமானக் கலைஞர்கள் கோடிகோடியாக சம்பாதிக்கின்றர்; ஆனால்வெளிநாடுகளில். இந்தக் கிராமத்தில் 17 வங்கிகள் உள்ளன. சுமார் 7,600 வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் குடும்பத்தினரின் மொத்த வைப்புத் தொகை ரூ.5,000 கோடியாகும்.

குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் அருகே அமைந்துள்ளது மாதாபர் கிராமம். இந்த மாவட்டம் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம். அதிலும் வரலாற்றுப் பாடாக மன்னர் காலத்தில் இருந்து, பல காலமாக கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆகும். கட்ச் மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை கட்சின் கொத்தனார்கள் (மேஸ்திரிஸ் ஆப் கட்ச்) என்று அழைப்பார்கள். இந்த கட்ச் கொத்தனார்கள்  இப்போது ஒரு இனமாகவே மாறிவிட்டனர்.

முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முதன்மைத் தொழில்: வெளிநாட்டில் கட்டுமானத் தொழில், உள்நாட்டில் வேளாண்மை. சுவர் மற்றும் தரைகளில் ஓடுகள் பதிப்பது போன்ற உள்ளமைப்பு வேலைகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கிராம மக்கள் அனைவரும் குறைந்த கல்வித்தகுதியோடு படிப்பை முடித்துக் கொண்டு கட்டுமானத்; துறையில் தலைசிறந்த கொத்தனார்களாக மிளிர்வதையே குறிக்கோளாகக் கொள்கின்றனர். 

இவர்கள் இவ்வளவு பணக்காரர்களாக திகழ்வதற்கான அடிப்படைக் காரணம்- கட்டுமானக் கலைவல்வர்களாக இருப்பதும் அந்தத் தொழிலுக்கு அயல்நாடுகளையே நம்புவதும் காரணம் என்கின்றனர். ஆனாலும் மிகப்பெரிய கல்வித்தகுதி இல்லாத நிலையில் இவர்கள் தங்கள் கிராமத்தையே தங்களுக்கான தாய் மண்ணாகக் கருதி அனைத்து செல்வத்தையும் அந்த மண்ணிலேயே குவிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். 

வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள். இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளன.

இந்தக் கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான கட்டுமானக் கலைதிறனோடும், வெளிநாட்டுக் கனவோடும் பிறக்கிறது. இந்தக் கிராமத்தில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் அயல்நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் என்று வசிக்கின்றனர், பெரும்பாலும் படேல் சமூகத்தினர்தான் இங்கு வசிக்கின்றனர், இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 65 விழுக்காட்டினர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான்.

இவர்கள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இவர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து திரும்பி இந்தியா வந்ததும் பெரும்சேமிப்போடு சொந்த நிலத்தில் வேளாண்மை, சிறுசிறு வணிகங்களில் ஈடுபடுகின்றனர்.
மாதாபர் கிராம கூட்டமைப்பு ஒன்று லண்டனில் 1968-ல் தொடங்கப்பட்டது என்றும், இதன் கிளை ஒன்று மாதாபூரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரியவருகிறது.

அயல்நாட்டில் வசித்தாலும் தங்கள் பணத்தை இந்தியாவில்தான் இவர்கள் சேமிக்கின்றனர். குறிப்பாக கிராம வங்கிகளில்தான் சேமிக்கின்றனர். வேளாண்மையே மாதாபூரின் முதன்மைத் தொழில், இங்கிருந்து வேளாண் விளைபொருட்கள் மும்பைக்கு அனுப்பப்படுகின்றனவாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.