Show all

மீண்டும், கேட்டலன் குடியரசுக்கே கேட்டலன் மக்கள் ஆதரவு! ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டு விட்டது: பூஜ்டிமோன்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கேட்டலோனிய விடுதலைக்;கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்த ஸ்பெயின் அரசாங்கம் அப்பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை பறித்ததுடன் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் அறிவித்தது.

தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டதில், கேட்டலோனிய விடுதலை ஆதரவு கட்சிகளான ஒருங்கிணைந்த கேட்டலோனியா, கேட்டலோனியாவின் இடது குடியரசு கட்சி மற்றும் பாப்புலர் யூனிட்டி ஆகியவை இணைந்து மொத்தம் 70 இடங்களை வென்று பெரும்பான்மையை பெற்றுள்ளன

மொத்தம் 135 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் குடிமக்கள் கட்சி 25 சதவீத வாக்குகளை பெற்றதுடன் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கேட்டலேனியா பிராந்தியத்திற்கான நாடாளுமன்ற தேர்தலில், ஸ்பெயின் அரசு தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அப்பிராந்தியத்தின் தலைவர்பூஜ்டிமோன் அறிவித்துள்ளார்.

தற்போது பிரஸ்ஸல்ஸில் தஞ்சமடைந்துள்ள கேட்டலோனியாவின் முன்னாள் அதிபரான பூஜ்டிமோன், இந்த முடிவு ‘கேட்டலன் குடியரசு’ வென்றுவிட்டதை குறிப்பதாக பாராட்டினார்.

இதன் விளைவாக, அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை யாருக்கு வழங்கப்படும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,643

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.