Show all

இலங்கை கடற்படை அடாவடி! தமிழ்நாட்டைச் சேர்ந்த, 23இந்திய மீனவர்கள் கைது. மீட்கவேண்டி ஸ்டாலின் மோடிக்கு மடல்

இலங்கை கடற்படையால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மீட்பு நடவடிக்கைக்கு முயலவேண்டும் என்று, தமிழ்நாட்டின் முதல்வர் ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு மடல் எழுதியுள்ளார்.

29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களின் மரபுஉடைமையான மீன்பிடி பகுதியாக கச்சத்தீவு கடற்பரப்பு உள்ளது. ஆனால் கச்சத்தீவு கடற்பரப்புக்குச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்;த இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இலங்கை கடற்படையால் இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் நடுக்கடலில் தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களை அரிவாளால் வெட்டுவது, கற்களை கொண்டு தாக்குவது இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு - இலங்கை வடக்கு பகுதி மீனவர்களிடையே மோதல்கள் நிகழ்ந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் 23 பேரை கைது செய்ததாக இலங்கை கடற்படை வழக்கமான புளுகை இந்த முறையும் கட்டவிழ்த்துள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக எட்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. மேலும் 54 தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் அப்போது தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்திருந்தது.

தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அக்கரைப்பேட்டையில் இருந்து நேற்று முந்தாநாள் காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிவனேசன், சிவகுமார் ஆகியோருக்கு சொந்தமான படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்ததாகப் புளுகி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த 2 படகுகளில் இருந்த முருகன், கந்தன், சிவசக்தி உள்ளிட்ட 23 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 23 தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்;நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களின் படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இதேபோல் கேட்பாரற்று கிடந்து முற்றிலும் சிதிலமடைந்து போயின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படை கைது செய்த, தமிழ்;நாட்டை சேர்ந்த 23இந்திய மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை கோரி தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் எழுதியுள்ள மடலில், திங்கட் கிழமை அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், புதன் கிழமை அன்று பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்ட காலச் சிக்கலை உடனடியாக இந்தியப் தலைமைஅமைச்சர் தலையிட்டு, நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டுமென்றும், முதல்வர் தனது மடலின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்த சிக்கலை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு வலியுறுத்துமாறு இந்தியத் தலைமைஅமைச்சரை தனது மடலில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியத் தலைமைஅமைச்சர் உரிய வழிமுறைகளைக் கையாண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆம்! தமிழ்நாட்டில் கொரோனா தொல்லை அகன்று வரும் நிலையில், இந்தச் சிங்களப் பேரினவாதிகளால், தமிழ்;நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது, அடவடி தொடங்கப்பட்டிருப்பது, இந்திய அரசுக்கு உடனடியாகத் தலையிட்டு தீர்க்க வேண்டிய கடப்பாடு ஆகும்.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,037.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.