Show all

விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் காணொளி! வலையில் சிக்கிய திமிங்கலக் குட்டியை விடுவிக்கும் வரை காத்திருந்த தாய்த்திமிங்கிலம்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் கடற்கரை பகுதியில், மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல குட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. திமிங்கல குட்டியை விடுவிக்க சுமார் இரண்டு மணி நேரம் மீட்பு குழுவினர் போராடினர். முன்னதாக வலையில் சிக்கிய குட்டியை விடுவிக்கும் வரை, அதன் அருகே தாய் திமிங்கலம் வட்டமிட்டு கொண்டிருந்தது. இந்தக் காணொளி இணையத்தில் தீயாய் பரவி விருப்பங்களையும் பகிர்வுகளையும் அள்ளிக் குவித்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,935.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.