Show all

அறுபத்திநான்கு ஆண்டுகளாக இசை விருதுகள்! 86 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, அமெரிக்காவில்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை சிறப்பாகத் தொடங்கியுள்ளது அமெரிக்காவில். அறுபத்து மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசைத்துறையில் சிறந்த பங்காளிப்பாற்றும் கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். இந்த ஆண்டு நிகழ்ச்சியை ட்ரவர் நோவா தொகுத்து வழங்குகிறார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,208. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.