Show all

5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும்

5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும், நாட்டுத் தலைமைகளுக்கும் மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.

30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தற்பரை என்பது தமிழர் காலக் கணிப்பின் மிக நுட்பமான கால அளவாகும். ஒரு தற்பரை என்பது, பரை என்கிற இசைக்கருவியை ஒரு கொட்டு கொட்டும் போது எழுகிற அதிர்வுகளின் ஒற்றை அதிர்வு நேரமாகும். அறுபது பரை நேரத்தை ஒரு விநாழிகை என்றும் அறுபது நாழிகை நேரத்தை ஒரு நாள் என்றும் தமிழர் நாளுக்கான காலக் கணக்கை கணித்திருக்கின்றனர். 

சூரியனே பருவகாலத்தின் அடிப்படை என்றும், அதனால் ஞாயிற்றுக்கும் நமது புவிக்குமான ஒரு சுழற்சியை ஒரு ஆண்டு என்று தமிழர் கணித்தனர். 5124 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியாக ஆண்டுக்கான காலக்கணக்கை 15 தற்பரை 31 விநாழிகை 15 நாழிகை 365 நாட்கள் கணக்கிட்டனர். 

நடப்பு 5124வது தமிழ்த் தொடர் ஆண்டுக்கான '15 தற்பரை 31 விநாழிகை 15 நாழிகை 365 நாட்களானது' நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து 19வது நாழிகை 26வது விநாழிகை 00வது தற்பரையில் (நண்பகல் 2.03க்கு) முடிகிறது. 

அதனால் அடுத்துவரும் 5125வது தமிழ்த் தொடர் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு நாளைக் காலை சூரிய உதயத்தில் இருந்து 19வது நாழிகை 26வது விநாழிகை 00வது தற்பரையில் (நண்பகல் 2.03க்கு) பிறக்கிறது. தமிழர் நாள் தொடக்கம் காலை ஆறு மணி என்பதால், தொடர் ஆண்டுக் கணக்கின் 5125வது தமிழ்ப் புத்தாண்டை நாளை காலை ஆறு மணிக்கு சூரிய உதயத்தில் கொண்டாடலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,582.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.