Show all

2000 குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை! சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை வழக்கமான தண்டனைகளுக்கு கட்டுப்படாத நிலை

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்களுக்கு  எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.  வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் கஜகஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. கஜகஸ்தான் நாட்டை பொறுத்தமட்டில் சிறார் பாலியல் வன்முறை வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடும் சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்றங்களின் எண்ணிக்கையில் எந்த மாறுதலும் இல்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,000 சிறுவர்கள் பாலியல் வன்முறை வழக்குகள் கஜகஸ்தான் நாட்டில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்கள்  மீதான பாலியல் வன்முறை அதிகரித்ததாலேயே அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றத்திற்கு என கஜகஸ்தான் அரசு சுமார் இருபது இலட்சம் ரூபாய் அளவுக்கு நிதியும் ஒதுக்கியுள்ளது. மட்டுமின்றி குடிஅரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. சைப்ரொடெரோன் என்ற மருந்தையே இதற்கென்று பயன்படுத்த உள்ளனர். இதனால் அறுவைசிகிச்சை ஏதும் மேற்கொள்ள தேவையில்லை என்று சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அறங்கூற்றுமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆண்மை நீக்கம் செய்துகொள்ள சிறப்பு மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய நபர் ஒருவருக்கு முதன் முறையாக ஆண்மை நீக்கம் செய்யபட உள்ளது. நலவாழ்வுத்துறை அமைச்சின் மேற்பார்வையில் குறித்த நபருக்கு ஆண்மை நீக்க மருந்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

   -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,926.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.