Show all

இரண்டுகோடி பரிசு! நீரியல் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய சென்னை பேராசிரியர் குழுவினருக்கு

நீரியல் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக, இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருதுக்கு, சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: எதிர்வரும் 27,ஆவணி (12.09.2022) அன்று நியூயார்க் நகரம், ஐக்கிய நாடுகள் அவை தலைமையகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் தலப்பில் பிரதீப் மற்றும் அவரது குழுவினருக்கு, பரிசுத்தொகையாக இரண்டு கோடி ரூபாய், தங்கப்பதக்கம், கோப்பை, மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன.

சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும் தலப்பில் பிரதீப் மற்றும் அவரது குழு, நீர் தொடர்பான ஆராய்ச்சியில், புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவில் அகற்றும் புதிய தொழில்நுட்பத்தையும், மலிவு விலையில் மீச்சிறு அளவில் பொருட்களை உருவாக்கியதற்காகவும், இவருக்கும் இவரது குழுவிற்கும் 'இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருது' வழங்கப்பட உள்ளது.

நீரியல் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததற்காக, இவ்விருதுக்கு, தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 27,ஆவணியன்;று நியூயார்க் நகரம், ஐ.நா தலைமையகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், இவர்களுக்கு பரிசுத்தொகையாக இரண்டு கோடி ரூபாய், தங்கப்பதக்கம், கோப்பை, சான்றிதழும் வழங்கப்படவுள்ள செய்தி பரவபரவ, விருதுக்கு தேர்வாகியுள்ள குழுவினரை செய்தியறிந்தவர்கள் பேரளவாகப் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,281.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.