Show all

ஐந்து நாட்களாக அணைக்க முடியாமல் பரவும் காட்டுத்தீ! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை; பீதியில் கலிபோர்னியா மக்கள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.

அப்பகுதிகள் கடும் புகை மூட்டமாக உள்ளதால் தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. தீயில் வீடுகளை இழந்த பலர் குடும்பம் குடும்பமாக கார்கள் மூலம் தொலைவான இடத்துக்கு சென்று காருக்குள் தூங்கியபடி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படும் நிலையில் கருகிய நிலையில் இன்று 13 பிரேதங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,971.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.