Show all

கூகிள் முகப்பில கோடைக்காலஸ் பெஷல் ஒலிம்பிக்ஸ் லோகோ

உலகில் மனநலம் குன்றியவர்களுக்காக சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியான ஸ்பெஷல் ஒலிம்பிக் கேம்ஸ் (Special Olympics games)அ மெரிக்காவின் லாஷ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

14 ஆவது கோடைக்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியான இது ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடத்தப்படும்.

இதை முன்னிட்டு உலகின் பிரபல தேடுபொறியான கூகிள் தனது முகப்பில் இன்று இக்கோடைக்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளைச் சிறப்பித்து லோகோவெளியிட்டுள்ளது.

மேலும் இந்த லோகோவில் போட்டியாளர்கள் பந்து விளையாடுதல், பாரம் தூக்குதல் மற்றும் நீந்துதல் போன்றவகைகளில் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. இம்முறை 2015 ஆம் ஆண்டுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சுமார் 170 நாடுகளைச் சேர்ந்த 7000 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லாஷ்ஏஞ்சல்ஸ் நகரில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாக இது விளங்குகின்றது.

ஒவ்வொரு இரு வருடங்களுக்கும் ஒரு முறை நடத்தப்படும் விசேட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மனநல அல்லது அறிவுத்திறன் குறைபாடு உடையபோட்டியாளர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றுவதற்காக நடைபெற்று வரும் சர்வதேசரீதியிலான போட்டி நிகழ்வாகும். இதில் 26 வகை ஒலிம்பிக்ஸ் ஸ்டைல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இம்முறை லாஷ்ஏஞ்சல்ஸில் ஆரம்பமாகியுள்ள ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் துணைவியார் மிச்செல்லே ஒபாமா பிரதமஅதிதியாகக் கலந்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.