இந்திய கிரிக்கெட் அணி 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை சுற்றுபயணம் செல்கிறது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவுக்கு வந்து 4 டெஸ்ட், 5 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது
இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அந்த போட்டி அட்டவணை வருமாறு:–
ஜன.12: முதலாவது ஒருநாள் போட்டி (பெர்த்)
ஜன.15: 2–வது ஒருநாள் போட்டி (பிரிஸ்பேன்)
ஜன.17: 3–வது ஒருநாள் போட்டி (மெல்போர்ன்)
ஜன.20: 4–வது ஒருநாள் போட்டி (கான்பெர்ரா)
ஜன.23: 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி (சிட்னி)
ஜன.26: முதலாவது 20 ஓவர் போட்டி (அடிலெய்டு)
ஜன.29: 2–வது 20 ஓவர் போட்டி (மெல்போர்ன்)
ஜன.31: 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி (சிட்னி)
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.