Show all

ப்ளூட்டோவுடன் டச் விட்டுப் போன நாசா

நாசாவின் விண்கலம் ஜூலை 4ம் தேதி தனது ப்ளூட்டோ கிரகத்துடனான தொடர்பை இழந்து 89 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை மீளப் பெற்றது. இந்த நிலையில் ப்ளூட்டோ கிரகத்தில் நான்கு கரும்படலம் வியாபித்து இருப்பததையும் அது கண்டுபிடித்துள்ளது. இந்த கருப்பு நிறப் பகுதி என்ன என்ற ஆய்வு தற்போது சூடு பிடித்துள்ளது.

நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் என்ற விண்கலமானது ப்ளூட்டோ கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இடையில் சற்று தொடர்பு துண்டிக்கப்ட்ட இந்த விண்கலமானது தற்போது சரியான முறையில் இயங்கி வருகிறது ஜூலை 7ம் தேதி முதல் இது முழு அளவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜூலை 14ம் தேதி இந்த விண்கலமானது ப்ளூட்டோவைக் கடந்து செல்லவுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.