Show all

அடுத்த ஆண்டு முதல் சென்னையிலும் தயாராகிறது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேசி!

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐபேசி என்பது ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு இயங்குதளத்தால் செயல்படுகிறது. 

ஐபேசி எனும் செயற்கை நுண்ணறிவு கைப்பேசியை உருவாக்கியது ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் இயங்கும் ஆப்பிள் கணினி நிறுவனம். ஐபேசி பிறப்புக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஸ்டீவ் ஓஜினியக், ரோனால்ட் வேன் எனும் கணினி வல்லுநர்களும் பெரும் பங்காற்றி உள்ளனர்.

வரும் ஆண்டு முதல் சென்னை திருப்பெரும்பத்தூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் ஐபேசி பலமாதிரிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

உலகின் பிரபலமான பல பேசி நிறுவனங்களுக்கு பாக்ஸ்கான் உற்பத்தியாளராக உள்ளது. சென்ற ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள பீனியாவில் ஐபேசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் ஆண்டு முதல் சென்னையில் பாக்ஸ்கான் உற்பத்தியைச் செய்ய உள்ளது.

திருப்பெரும்பத்தூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாக்ஸ்கான் பேசி உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. தற்போது ஐபேசி உற்பத்திக்காக கூடுதல் ஆலையையும் நிறுவியுள்ளனர்.

பாக்ஸ்கான் நிறுவனத்தில் தற்போது 15,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 90 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். ஐபேசி உற்பத்தி தொடங்கும் போது மேலும் புதிதாக ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,014.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.