Show all

பொங்கலுக்கு பொதுவிடுமுறையே இல்லை என அறிவித்திருக்கிறது நடுவண் அரசு

பொங்கல் பெருவிழாவைக் கட்டாய விடுமுறை நாளில் இருந்து நீக்கிய நடுவண் அரசு, நடுவண் அரசின் ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.

     தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழா நடுவண் அரசின் கட்டாய விடுப்புப் பட்டியலில் இருந்து வந்தது. ஆனால், இன்று பொங்கல் திருவிழாவைக் கட்டாய விடுமுறை நாளில் இருந்து நடுவண் அரசு நீக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் நடுவண் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது.

     பொங்கல் திருநாளைக் கொண்டாடுபவர்கள் மட்டும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நடுவண் அரசு அறிவித்திருந்தாலும், நடுவண் அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற்றே பொங்கலுக்கு விடுமுறை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

     பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம், கோரிக்கை, வலியுறுத்தல் வலுப்பெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையைக் கட்டாய விடுமுறை நாளில் இருந்து நடுவண் அரசு நீக்கியுள்ளது என்ன சேதியைத் தமிழர்களுக்குத் தெரிவிப்பதற்காக?

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.