Show all

இன்றைக்கு நடக்கும் சல்லிக்கட்டு கின்னஸில் இடம்பெறப் போகிறது

இன்று நடத்தப்படும் சல்லிக்கட்டு நிகழ்ச்சி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

     தமிழர்களின் வீரவிளையாட்டான சல்லிக்கட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக தடை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சனவரி மாதம் மாணவர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் சட்டம் இயற்றப்பட்டு, சல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் இன்று சல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு,

‘மெரினா கோப்பை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

     சல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தில், பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சேர, சோழ, பாண்டியர்களின் கொடி பறக்க விடப்படுகிறது. மாடு பிடி வீரர்களும் 3 அணிகளாக பிரிக்கப்பட்டு, களத்தில் நிற்க தலா 2 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

     ஆறு மணி நேரம் நடைபெறும் சல்லிக்கட்டில், சுமார் 600 மாடுகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான மாடுகளைக் குறைவான நேரத்துக்குள் திறந்து விளையாட விடுவது, சல்லிக்கட்டை பாரம்பரிய முறைப்படி நடத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதற்காக கின்னஸ் அதிகாரிகள் 3 பேர் வந்துள்ளனர். சல்லிக்கட்டில் வெற்றிபெறும் மாடுகளுக்கும் வீரர்களுக்கும் கார், பைக், ஏ.சி. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்டாப் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.