Show all

விஜய்- இராஜராணி நாடகத்தில், செம்பா போட்டியில் வெல்லக்கூடாது என்பதற்கான அர்ச்சனா சதி போன்றதாம் நீட்-சதியும்

22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய் தொலைக்காட்சியில் இராஜராணி தொடர் மக்கள் மனங்கவர்ந்த தொடராகும். இந்த நாடகத்தில், கதைத் தலைவி செம்பா, சிறந்த குடும்பத் தலைவி போட்டியில் தன்னைத் தாண்டி வென்று விடக் கூடாது என்பதற்காக, அர்ச்சனா என்பவர் சல்லித்தனமான சூழ்ச்சிகளை செய்கிறார். ஆனாலும் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து நேற்று செம்பா சிறந்த குடும்பத் தலைவிக்கான வைரமணிமுடியும், ஒரு இலட்ச ரூபாய் காசோலையும் பெற்று விடுகிறார். 

அந்த நாடகத்தைப் பார்த்து கருத்து பரிமாறிக் கொள்ளும் குடும்பத்தினர் நம்ப தமிழ் நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் வென்று விடக் கூடாது என்பதற்காக பாகிஸ்தான் எல்லையிலும், சீன எல்லையிலும் தேர்வு மையம் ஒதுக்கி சல்லித்தனமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் மோடி.

நம்ப தமிழ்நாட்டு மாணவர்களும் செம்பா மாதிரி பெருவாரியாக வெற்றி பெற்று மோடி முகத்தில் கரி பூசுவார்கள் என்று நையாண்டி செய்தார்கள். 

மேலும் பொதுமக்கள், தமிழக பொதுச் சேவை தேர்வாணையம் ஒட்டு மொத்த இந்திய மாணவர்களுக்கு தேர்வு வைக்கச் சொன்னால் விளையாட்டாக முடித்து விடும். 

நீட் தேர்வுநடத்தும் பொறுப்பை நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்திடம் ஒப்படைத்தது குருவி தலையில் பனங்காய் வைத்த கதைதான் என்று பேசிக்கொள்கிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,778.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.