Show all

அம்மாவின் இருசக்கர வாகன திட்டத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் - என்ன தேவை ?

டூ வீலருக்கு 25,000 அல்லது 50% சலுகை தரும் ‘அம்மாவின் இருசக்கர வாகன திட்டத்திற்கான மனுக்களை நீங்கள் நாளை முதல் பிப்ரவரி 05 வரை விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிப்போரின் கட்டாய தகுதி :

• வேலைக்கு செல்லும் பெண்கள்

• 18 முதல் 40 வயத்துக்குள்ளாக இருக்க வேண்டும்

• ஆண்டு வருமானம் 2,50,000 ரூபாய்க்குள்ளாக இருக்க வேண்டும்

• இருசக்கர வாகன உரிமம்

 

எங்கு மற்றும் எப்போது விண்ணப்பங்கள் கிடைக்கும்:

கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் இலவசமாக கிடைக்கும். வருகிற 22-ந்தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

வாகன தகுதி:

• 125 சி சி வண்டியாக இருக்க வேண்டும் . கியர் வசதி இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம்

• வாகனம் உற்பத்தி செய்யப்பட்ட வருடம் 2018 ஆக இருக்கவேண்டும்.

 

தேவையான ஆவணங்கள் :

விண்ணப்பிப்பவர்கள் வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச்சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்றிதழ், வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ், ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.