Show all

இன்று அன்னையர்நாள்! குடும்ப அமைப்பின் சிறப்பை சமூகத்திற்கு உணர்த்தும் நாள்

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அன்னையைக் கொண்டாடுவது என்பது தமிழர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய குடும்ப அமைப்பால் நன்றாகவே வளர்ந்து உச்சம் கண்டது.

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்று அன்றைய தமிழ்க் குடும்ப அமைப்பு சமுதாயத்தில் உயர்ந்து இருந்தது. 

அயல் சமூக அமைப்புகளின் கலவைத்தன்மையால் இன்றைய சமூகம் தமிழ்க் குடும்ப அமைப்பை சிதைப்பதாக இருக்கிறது. அதனாலாயே குடும்பத்தின் தலையாய அங்கமாகிய தாய் அன்னியமாகிப் போகிறாள். 

தமிழர் கண்ட குடும்ப அமைப்புமுறை சமுதாய அமைப்புமுறைக்கான ஒரு முன்மாதிரி. பழந்தமிழ்ச் சமுதாய அமைப்புமுறை இன்றைக்கும் அழகாக நடைபோட்டு வரும் குடும்ப அமைப்புமுறை போன்று நேர்த்தியானது. 

பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்விப்பது என்கிற பிள்ளைகளுக்கான கடமைகள் அனைத்தும் பெற்றோர்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது தமிழ்க் குடும்ப அமைப்புமுறையில்.

அவற்றுக்கான பொருளைப் பெற்றோர்கள் தொழில் மூலமாகவே ஈட்டுகின்றனர். நடப்பில் நம்மைப் பிணைத்துக் கொண்டுள்ள இற்றைச் சமுதாய அமைப்புமுறை தொழில் செய்து வருமானம் ஈட்டிய போதும் தம்மக்களின் உழைப்பைச் சுரண்ட வரியும் விதித்து மிரட்டி ஊடகங்களில் விளம்பரம்செய்து கடுமையாக வசூலிக்கவும் செய்து அதையும் ஆளும்பாழும் வீணடிக்கிறது. உலக வங்கியில் கடனும் வாங்குகிறது. மாதிரிச்சமுதாயமான குடும்பத்தில் பிள்ளைகளைப் பெற்றோர் தம் தொழில் வருமானத்தில் சிறப்பாகப் பேணும் முயற்சிக்கு தடையாக சாரயக் கடைகள் நடத்தி நம் குழந்தைகளை சான்றோன் ஆக்கும் முயற்சிக்குத் தடையாகவும் நிற்கிறது.  

ஆகவே சிறப்பாக வளர்ந்து செழித்த தமிழக் குடும்பம்- சமூக வீணடிப்புகளால், சமூகத்தையும் சேர்ந்து பாதுகாக்க கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது. சமூக வண்டியை இழுத்துச் செல்வதற்காக அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, என்ற உறவுகளோடு அப்பா ஏன் அம்மா என்ற உறவைக் கூட இறக்கி வைத்து இளைப்பாற வேண்டியதாக உள்ளது. 

சமூகம் என்ற பேரமைப்பு குடும்பங்களுக்கு ஏராளமாக செய்யக் கூடிய வாய்ப்பு உள்ள நிலையில், குடும்பம் சமூகத்தை இழுத்துச் செல்ல வேண்டிய நிலை அறிவற்ற, பொறுப்பற்ற அரசியல்வாதிகளால் உருவாக்கப் பட்டுள்ளது. 

பிள்ளைகளுக்கான தொழில் வாய்ப்பை, கல்வி வாய்ப்பை, சரக்கு சேவைவரி நியுட்ரினே நீட் என்பவைகளால் தடுத்து விட்டு, 

பிள்ளைகள் பெற்றோர்களை பராமரிக்கா விட்டால் தண்டனை என்று சட்டம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது. 

பெற்றோர்களைத் தெய்வமாக வைத்து பூசிக்க வழியில்லாமல் எல்லா வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்கிற அரசு, சட்ட, அறங்கூற்றுமன்ற, ஊடக அமைப்பகள் தானே குற்றவாளிகள்.   கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி (மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட பாலை நில தமிழர் தெய்வம் கொற்றவையின் மற்றொரு நிலை யாகவே கொண்டாடப் பட்டு வருகிறது. 

தமிழர் அடிப்படையில் தாய்மைக்கான பெருங்கொண்டாட்டம் மாரியம்மன் திருவிழாவே. ஆனாலும் ஐரோப்பியக் கலாச்சார அடிப்படையில், ஒவ்வொரு விசயத்திற்குமான ஒரு நாளை ஒதுக்கி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிற நடைமுறையையும் உலகையொட்டி இயங்க நாமும் கொண்டாடி வருகிறோம். 

அந்த வகையாக நேற்று யாழ்ப்பாண வட மாகாணஅவை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வைகாசி04 (மே 18) நாளினை தமிழினப் படுகொலை நினைவு நாளாக உலகளாவி பதிவு செய்யப் பட்டது. 

இது போன்றே அன்னையர் நாளை அன்னா ஜார்விஸ் என்பவர்தான் தொடங்கி வைத்து வழிகாட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னா ஜார்விஸ் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 107 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் நாள் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என்பதுதான் அந்த கூட்டறிக்கையில் இருந்தது.

நம்மைப் பொறுத்தவரை, நம் அன்னையரைப் போற்றிக் கொள்வதற்குத் தடையாய் உள்ள நம் அரசியல், அறங்கூற்று, ஊடகத் துறைகளுக்கு அறிவைப் பாய்ச்சி, குடும்ப அமைப்பின் சிறப்பை சமூகத்திற்கு உணர்த்தும் நாள் அன்னையர் நாளாக இருக்க முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,786. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.