Show all

ஒரே கட்சி பாஜகவா! கூச்சமேயில்லாமல், நண்டு சிண்டு எல்லாம்கூட, தில்லாலங்கடி காட்டுவதில்

நகராட்சி மன்றத்திற்குள் எனக்கு ஹிந்தி தெரியாது என்று தெரிவித்த ஒரே பாஜக உறுப்பினர் உமாஆனந்தன், வெளியில் செய்தியாளர் சந்திப்பில் மே ஹிந்தி மாலும் என்று ஹிந்தியிலேயே எனக்கு ஹிந்தி தெரியும் என்று முன்னெடுத்த தில்லாலங்கடி இணையத்தில் கடுமையாகப் பகடியாடப்பட்டு வருகிறது.

28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை நேற்று பதிகை செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசினார். 

நமஸ்காரம் என்று கூறி தனது உரையை உமா ஆனந்த் தொடங்கினார். அப்போது 'வணக்கம்' என்று திமுக உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் எடுத்துக் கொடுத்தனர். 

பின்னர், ஆங்கிலம், தமிழ் இரு மொழிகள் கலந்து நான் பேசுவேன் மன்னித்து விடுங்கள் என பாஜக உறுப்பினர் உமா கூறிய நிலையில், ஹிந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என்று நகைச்சுவையாக திமுக உறுப்பினர்கள் கூறினர். 

அதற்கு 'எனக்கும் இந்தி தெரியாது' என்று உமா பதிலளித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் கைதட்டி சிரிப்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உறுப்பினர்கள் வரவேற்பைத் தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் சம்பளம் கட்டாயம் என்று கூறி, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரினார். 

அப்போது குறுக்கிட்ட துணை நகரத்தந்தை மகேஷ்குமார், ஒன்றிய அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளிக்க, திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர். 

ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கருத்து இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு காட்டுவதில் வல்லமை மிக்க  தமிழ்நாட்டில் வழக்கம் போலவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக, அதிமுக, மதிமுக என பாஜக தவிர்த்த அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், கல்;வி நிறுவனங்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஹிந்தித் திணிப்பை ஆதரித்து பல சமயங்களில் பேசிய உமா ஆனந்தன், ஹிந்தி தெரியாது எனக் கூறியது குறித்து கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எனக்கு ஹிந்தி தெரியும் 'மேரா ஹிந்தி மாலும்'  வேண்டுமென்று தான் ஹிந்தி தெரியாது எனக்கூறினேன் என பேசினார். 

இங்கிதம் கொஞ்சம்கூட இல்லாத கட்சியான பாஜக என்றாலே கடுப்பாகிப் போகும் இணைய ஆர்வலர்களுக்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது. உமா ஆனந்தன் முன்னெடுத்த தில்லாலங்கடி இணையத்தில் கடுமையாகப் பகடியாடப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,215.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.