Show all

செயலலிதா அவர்கள் இறப்புக்கு திமுகதான் காரணம்! தம்பிதுரை

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா இறப்புக்கு திமுகதான் காரணம். சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்ததன் மூலம் பெங்களூர் சிறை சென்ற அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் மேல் முறையீடு செய்து அவரை சிறையில் அடைக்க திமுகதான் காரணம். என்று தம்பிதுரை அவர்கள் கூறியுள்ளார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து சட்டம் விடுவித்தாலும், திமுகவின் சதி, விடாமல் துரத்திய மன உளைச்சலே, செயலலிதா அவர்களின் மரணத்திற்கு காரணம் என்று தமிழக பாமர மக்கள் நம்பும் அதே காரணம் இப்போதுதான் புரிந்ததா தம்பிதுரை உங்களுக்கு.

வீரபாண்டி ஆறுமுகம் இதே போன்று வழக்கின் மன உளைச்சலில் தான் காலமானார். அதற்கு அதிமுக காரணமாய் அமைந்தது.

அதிகாரமேயில்லாத, வெறுமனே சுருட்டலுக்கு மட்டுமே பயன் படுகிற தமிழக ஆட்சிக்கு- தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் இவ்வளவு கேவலமாக ஒன்;றையொன்று தாக்கிக் கொள்வது போல, 

நடுவண் அரசில் அமையும் காங்கிரசும், பாஜகவும் ஒன்றையொன்று அம்பலப் படுத்துமேயானால் இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கிடைக்கும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,013.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.