Show all

தமிழிசை, கங்கை அமரன், இரண்டு மணி நேரம் கடலில் வாக்கு சேகரிப்பு கலகல

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் இராதாகிருட்டினன்நகர் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர், படகில் சென்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் வாக்கு சேகரித்தனராம்.

     செயலலிதா மறைவைத்தொடர்ந்து, இராதாகிருட்டினன்நகர் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில், தி.மு.க, அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, பா.ஜ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

     களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், அனல்பறக்கும் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், நடைப்பயணமாக வாக்கு சேகரித்து வருகிறார். டி.டி.வி.தினகரன் மற்றும் மதுசூதனன், தீபா ஆகியோர் வாகனங்களில் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

     இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், கடலில் இறங்கி மீனவர்களிடம் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

     மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் படகில் கடலுக்குச் சென்று, மீனவர்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது, மீன் பிடித்துக்கொண்டு கரைக்குத் திருப்பியவர்கள் மற்றும் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களிடம், கட்சியினர் வாக்கு சேகரித்தனர். இரண்டு மணி நேரம் கடலில் வாக்கு சேகரித்தனர்.

     மீனவர்களிடம் வாக்கு சேகரிக்க என்ன தகுதி இருக்கிறது பாஜகவிற்கு என்று பேசிக்கொள்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

     ‘சூடு சொரணை கொஞ்சமும் இல்லை நீPயா தமிழனின் பிள்ளை’

என்கிற பாவலர் காசி ஆனந்தன் பாடல் இவர்களுக்குத்தான் பொருந்தும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.