Show all

விஜயேந்திரரின் தமிழ் அவமதிப்புக்கு! வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிகின்றன

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் மொழியை அவமதித்தமைக்காக காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகரமுதலி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விஜயேந்திரர், எச்.ராஜா, சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நூல் அகரமுதலி வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, மேடையில் இருந்த ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவருமே எழுந்து நின்றனர். ஆனால் காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் மட்டும் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

விஜயேந்திரரின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. தமிழ்தாய் வாழ்த்து என்ன அவ்வளவு அவமானமானதா என அங்கிருந்த தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்தனர்.

தமிழை அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் விழா முடிவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்ட போது மட்டும் விஜயேந்திரர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட போது எழாத விஜயேந்திரர், தமிழை அவமதித்து விட்டதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,677

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.