Show all

தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்: அதிரவைத்த தகவல் அறியும் உரிமைச் சட்டஆணைய பதில்!

தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக தற்கொலைசெய்துகொண்ட 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது' என்று தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

     கடந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததன் காரணமாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பெரிய அளவிலான இழப்பைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் அதிர்ச்சியிலும், தற்கொலைசெய்துகொண்டும் உயிரிழக்க நேரிட்டது.

     இந்த நிலையில், புலியூர் நாகராஜன் என்பவர், வறட்சி நிவாரணம் குறித்தும் விவசாயிகள் உயிரிழப்பு குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் விளக்கம் கேட்டார். இதற்கு, தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பதில் அளித்துள்ளார். அதில்,

தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் தற்கொலைசெய்துகொண்ட 82 விவசாயிகளுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

என்று கூறப்பட்டுள்ளது.

     ஆனால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது 17 விவசாயிகள் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

     மோடியின் தலைமையில் உள்ள பாஜக அரசு வேளாண்மைக்;;;கு எதிரான அரசு.

பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து ஆதாயம் தேடுகிற அரசு.

மாநிலங்கள் உரிமைகளைப் பறிக்கிற அரசு.

மக்களுக்கு இந்த நன்மை செய்தால் எந்த ஆதாயம் கிடைக்கும் என்று கணக்குப் போடுகிற வியாபார நிறுவனங்களால் இயக்கப்படும் அரசு.

ஒரு ரூபாய் கூட மக்களுக்கு மானியமாக வழங்க விரும்பாத அரசு.

மக்களுக்கான மானியங்களை படிப்படியாக முடக்குகிற அரசு.

மதச்சார்பின்மைக்கு எதிரான ஹிந்துத்துவா அரசு.

ஹிந்தியைத் திணித்து மாநில மொழிகளுக்கு பாடை கட்ட முயலும் அரசு.

     இந்த அரசின் நடுவண் ஆட்சியின் கீழ் யார்! எப்படி! வேளாண் பெருமக்களின் துயர் துடைத்திட முடியும்?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.