Show all

தமிழகத்தில் தற்கொலை சாவுகள் அதிகம்! விபத்துகளை விடவும்; அதுவும் பெண்கள் - அதிர்ச்சி தகவல்

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலத்தில் 8ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

சேலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர், விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தனர். இதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலே இறந்தார். மற்றொரு மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரையும் வகுப்பில் தனித்தனியாக அமர வைத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது போன்ற பல தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவ மாணவிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் விபத்தால் உயிரிழப்பவர்களைவிட தற்கொலையால் உயிரிழப்பவர்கள் தான் அதிகம் என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம். இதில் தமிழகம் தான் முதலிடம் என்பது மேலும் அதிர்ச்சிகரமாக உள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழகத்தின் தற்கொலை விகிதம் 28 விழுக்காடு. இது தேசிய சராசரியைவிட மும்மடங்காகும். இந்திய அளவில் தற்கொலையில் தமிழகம் 8 ஆவது இடத்தில் இருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதிலும் 30 அகவைக்குள் இருக்கும் பெண்கள் ஆண்களை விட அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இதுகுறித்து ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு சார்பாக தற்கொலை தடுப்பு குறித்து ஆய்வு செய்த டாகடர் விஜயகுமார் கூறுகையில், ‘பெண்களின் பிறப்பு விகித்தைவிட தற்கொலை விகிதம் அதிகம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,631

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.