Show all

ஸ்டாலின் மனது வைத்தால் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கிடையாது!

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பாஜகவிற்கு 75விழுக்காடு எதிர்ப்பு இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. பாஜகவின் அதிகார பலத்தில் கட்டமைக்கப் பட்ட அதிமுகவை வருகிற நாடளுமன்றத் தேர்தலில் வைப்புத் தொகை இழக்கச் செய்ய தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்கள். 

அடுத்த தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட ஸ்டாலினுக்கு மாற்று இதுவரை உருவாகவில்லை. திமுக- காங்கிஸ் கூட்டணி உறுதி. எடப்பாடி அதிமுகவை கொத்தடிமையாக பாஜக நடத்துவதைப் போலத்தான், 

திமுகவை காங்கிரஸ் நடத்தி வந்தது. இந்த முறை காங்கிரசுக்கு அந்த மாதிரியான வாய்ப்பை ஸ்டாலின் கொடுக்கக் கூடாது. தவமாய் தவமிருந்து பெறுகிற ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கும் நிறைவாய் தக்க வைக்க வேண்டும், சட்டமன்ற உறுப்பினர்கள் கை எதற்கும் நீளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காங்கிரசோடு கெத்தான கூட்டணி வைக்க வேண்டும். 

பிள்ளையார் பிடிப்பதாக ராகுலின் பாட்டியாரால் பறிக்கப் பட்டு மோடி ஆட்சியில் குரங்காகிப் போன, கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு மாற்றித் தரவேண்டும் என்கிற நிபந்தனையை முதல் நிபந்தனையாக வைத்து காங்கிரசோடு கூட்டணி வைக்க வேண்டும். விபிசிங் போன்றதொரு தலைமை அமைச்சராக ராகுலை உருவாக்க வேண்டும்.

மூன்றாவது அணி அமைக்கிற முயற்சியில் இருக்கிற கட்சிகளை காங்கிரசுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க ஸ்டாலினால் உறுதியாக முடியும். 

பழைய காலத்தைப் போல தமிழறிஞர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கிற முயற்சியில் ஈடுபடக் கூடாது. தமிழ் அமைப்புகளுக்கு அண்ணா காலத்தில் பெரியாருக்கு இருந்த சுதந்திரம் வழங்கப் படவேண்டும். சங்க காலத்து மன்னர்கள் போற்றிக் கொண்டது போல தமிழ் சான்றோர்கள் மதிக்கப் படவேண்டும். தமிழ் சான்றோர்களை ஸ்டாலின் துதி பாட நிர்பந்திக்கக் கூடாது. 

தினகரன் அதிமுகவாக அங்கிகரிக்கப் படுவது எடப்பாடி- பன்னீரின் கெட்ட காலம். செயலலிதா, சசகலா, தினகரன் ஆகயோருக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு அவர்களை வளர்த்து விடும் முயற்சிக்கு இரையாகி விடக் கூடாது. 

இந்த வேலைகளை யெல்லாம் ஸ்டாலின் மனநிறைவோடு செய்தால் காங்கிரசோடு கெத்தான கூட்டணியாக, நீட்டை தமிழகத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமாக அப்புறப் படுத்தி விட முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,810. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.