Show all

காவல்துறை பாதுகாப்புடன் உலா வரும் எஸ்.வி.சேகர்! தமிழகத்தில் பாஜகவின் மேலாதிக்கத்திற்கு இது ஒருசோறுபதம்

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை முகநூலில்  எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இப்பதிவு தொடர்பாக சென்னை காவல்துறையினரும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் காவல்துறை அவரை கைது செய்யாமல் அவர் பிணைக்கு விண்ணப்பிக்கும் வரை காத்து இருந்தது. சேகர் முன்பிணை கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் எஸ்.வி.சேகருக்கு பிணை வழங்கவில்லை.

இந்த நிலையில் அவர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்து பிணை கேட்டார். ஆனால் உச்ச அறங்கூற்றுமன்றமும் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே எஸ்.வி. சேகர் பலமுறை காவலர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. சில பாஜக கட்சி நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொண்டார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது. தற்போது அவர் காவல்துறை பாதுகாப்புடன்தான் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி நேற்று எஸ்.வி. சேகர் காவலர் பாதுகாப்புடன் சென்னையில் வலம் வந்துள்ளார். காவல்துறை பாதுகாப்புடன் தாம்பரம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். அதன்பின் காவலருடன் அவரது சொந்த வாகனத்தில் சென்றுள்ளார். காவலர் அவருக்கு கார் கதவை திறந்துவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

தமிழக அரசியலில் பாஜகவின் வீர தீர சாகசங்கள் எப்படியானது என்பதற்கு இது ஒரு சோறுபதம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,817.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.