Show all

தமிழகத்தின் வரி-பங்கான ரூ.2775 கோடியை நடுவண் அரசு விடுவித்துத் தர வேண்டும்! சரக்கு-சேவை வரிக்குழுவில் ஜெயக்குமார்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாநிலத்தின் பொறுப்பில் இருந்த வரிகளோடு, நடுவண் அரசின் பொறுப்பில் இருந்த வரிகளையும் இணைத்து, ஒற்றை வரி என்ற பெயரில், மாநிலத்தின் வரி உரிமையைப் முற்றாகப் பறித்தும், நடுவண் அரசுக்கு வரி தராத துறைகளிலிருந்தும் வரி வாங்கவும் ஆன வரியே மோடி அரசின் சரக்கு-சேவை வரியாகும். 

இந்த சரக்கு-சேவை வரி அமலுக்கு வந்து ஒன்னரை  ஆண்டுகள் ஆகி விட்டன. 5 விழுக்காடு, 12 விழுக்காடு 18 விழுக்காடு, 28 விழுக்காடு என 4 அடுக்குகளாக சரக்கு-சேவை வரி விழுக்காடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வரி விழுக்காடுகளை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய சரக்கு-சேவை வரி குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் சரக்கு-சேவை வரி குழுவின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், குழு உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

மாநிலங்கள் வாங்க வேண்டிய வரியை நடுவண் அரசே வாங்கி மாநிலத்திற்கு தருவது என்பதுதான் இந்த சரக்கு-சேவை வரி என்ற நிலையில், கடந்த ஓராண்டாக தமிழகத்தில், தமிழக அரசுக்குமாக சேர்த்து நடுவண் அரசு வாங்கிய வரியில் தமிழகத்தின் பங்கான ரூ.2775 கோடியை நடுவண் அரசு உடனடியாக விடுவித்துத் தர வேண்டும். என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். 

செயலலிதா அவர்கள் உயிரோடு இருந்த வரை, மோடி அரசின் சரக்கு-சேவை வரிக்கு அனுமதி மறுத்து வந்தார். பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகி, சசிகலாவை பலிகடாவாக்கி பதவிக்காக சோரம் போன எடப்பாடி அரசு தமிழகத்தின் வரி உரிமையை விட்டுக் கொடுத்து விட்டு, தமிழகத்தில் வசூலித்த தமிழகத்தின் சரக்கு-சேவை வரி பங்குத் தொகைக்காக, நடுவண் அரசின் காலடியில் தவமாய் தவமிருக்கின்றன. இதைத்தான் தமிழ் முன்னோர் தும்பை விட்டு வாலைப் பிடித்தல் என்பர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.