Show all

தமிழக அமைச்சரவையில் இருந்து ரமணா நீக்கம்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று அறிவித்தார். அவர் வகித்து வந்த துறையை அமைச்சர் ப. மோகன் கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமைச்சர் பி.வி. ரமணா ஒரு பெண்ணுடன் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது அவருடைய மனைவி தான் என்ற சில நிழற்படங்களும் வெளியாகியன.

 

ரோஜா பூ குவியலுடன் உள்ளாடை அணிந்தவாறு நிழற்;படத்திற்கு போஸ் கொடுத்தும், மேலும் ஒரு நிழற்;படத்தில் அந்த பெண் அவருக்கு முத்தமிடுவது போல் ஒரு நிழற்;;படமும் வெளியாகின.

 

அந்தப் பெண் அவரது மனைவியாக இருந்தாலும், ஒரு கண்ணியமிக்க பொறுப்பில் இருக்கும் நபர் இப்படிப்பட்ட நிழற்படங்களில் இருப்பது சரியல்ல என்ற கருத்துக்களும் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. இது குறித்து சைபர் க்ரைம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று அதிரடியாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரது துறை சார்ந்த பொறுப்புக்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ப. மோகன் கவனிப்பார் என தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று அறிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

தமிழக அமைச்சரவையில் இருந்து ரமணா நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். மேலும் இந்த முறை அவரை கட்சி பதவியில் இருந்தும் முதல்வர் ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.