Show all

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு! ஆத்மார்த்தமாக வரவேற்றிருப்பது பாஜக மட்டுமே

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி தொடங்குவேன். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். காலம் குறைவாக உள்ளது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என கூறினார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனந்த அதிர்ச்சி அளித்து உள்ளார். இதில் இருந்து பின்வாங்க கூடாது-நடிகர் விவேக்.

சமூக உணர்வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துகள். வருக வருக நடிகர் கமல்ஹாசன்.

ரஜினியின் அரசியல் வருகையால் மாற்றம் ஏற்படும். விரைவில் ரஜினியை நேரில் சந்திக்க உள்ளேன்-மு.க. அழகிரி.

மதவாத அரசியலாக இல்லாமல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது-திருமாவளவன்.

அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினியின் கருத்தில் தெளிவில்லை. தமிழக மக்கள் புத்திசாலிகள்-சுப்ரமணியன்சாமி

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்-அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

வாழ்த்து கூறுவது மரபென்றால் அவருக்கு வாழ்த்துகள்-அமைச்சர் ஜெயக்குமார்.

ஓராண்டாக தமிழகத்திற்கு தலைகுனிவு என்ற ரஜினியின் கருத்தை அதிமுக மீதான நேரடி தாக்குதலாக கருதுகிறேன். ரஜினி கூறியது போல் தமிழகத்திற்கு எந்த தலைகுனிவும் ஏற்படவில்லை-அ.தி.மு.க. பாராளுமன்றஉறுப்பினர் அன்வர் ராஜா.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்-தி.மு.க. பாராளுமன்றஉறுப்பினர் திருச்சி சிவா.

துணிச்சலுடன் அரசியலுக்கு வருகிறேன் என கூறிய ரஜினிகாந்திற்கு எனது வாழ்த்துகள்-தமிழிசை சவுந்தரராஜன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,653

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.