Show all

உலகத் தமிழர்கள் பெருமிதம்! தமிழர் பொங்கல் திருவிழாவிற்கு விர்ஜீனியா அரசு அங்கீகாரம்

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் தமிழர் பண்பாட்டு விழா பொங்கலுக்கு முதல் மாநிலமாக விர்ஜீனியா மாநிலத்தில் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விர்ஜீனியா பொதுஅவையில் உறுப்பினர் டேவிட் புலோவா (ஜனநாயகக் கட்சி-பேர்பாக்ஸ்) கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்றும், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் சனவரி 14 பொங்கல் திருநாளாக அங்கீரிக்கப்பட்டுள்ளது.

      இந்தத் திருநாளன்று பொது விடுமுறை அல்ல என்ற போதிலும், மத விடுதலைக்கு அமெரிக்கா அனுமதி அளிப்பதால் மாணவர்கள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்து பொங்கல் திருவிழாவைக் கொண்டாட முடியும்.

      இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து விர்ஜீனியாவில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் திருவிழாவைக் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

      விர்ஜீனியா மட்டுமின்றி அமெரிக்காவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பண்பாட்டிற்கு பெருமை சேர்த்திடும் வகையில் இந்த அங்கீகாரம் அமைந்துள்ளது.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,652

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.