Show all

ரஜினி கமலோடு இணைய, இணை நிற்க வாய்ப்பேயில்லை

விரைவில் முதல்வர் வேட்பாளராக புதிய கட்சி தொடங்கவுள்ள கமல் நீட் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட தமிழர் அடிப்படை சார்ந்தவைகளில், நடுவண், மாநில அரசுகளை எதிர்த்து வருபவர்.

இதற்காக, ரஜினியுடனும் கைகோர்க்க தயார் என கமல் கூறியிருந்தார்.

ஆனால், ரஜினியோ தலைமை அமைச்சர் மோடியின், துாய்மை இந்தியா திட்டத்திற்கு, கீச்சுவில் ஆதரவு தெரிவித்து, கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர்,

பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தை, நான் முழுமையாக ஆதரிக்கிறேன். துாய்மையே தெய்வீகமானதுஎன, குறிப்பிட்டுள்ளார்.

நடுவண் அரசை கடுமையாக எதிர்க்கும், தமிழர் அடிப்படைகளில் காலுன்ற நினைக்கும் கமலோடு நடுவண் அரசை ஆதரித்து, தமிழக ஆளும் அதிமுகவை மட்டும் எதிர்க்கும் ரஜினி, இணையவோ கமலைத் தாண்டி வெற்றி பெறவோ தகுதி அற்றவரே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.