Show all

இரஜினிகாந்தும் ஆதரவு! ‘புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்தை நான் ஆமோதிக்கிறேன்’.

இரஜினிகாந்தும் ஆதரவு! ‘புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் சிரமங்களை கண் எதிரே பார்த்தவர் சூர்யா’

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கடுமையாக விமர்சித்து பேசியதற்கு- தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து வரும் தலைவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன், ஹெச்.ராஜா போன்றோர் வழக்கமான  விமர்சனத்தை முன்னெடுத்திருந்தனர்; ‘சூர்யாவுக்கு கல்வி குறித்து என்ன தெரியும்’ என்றெல்லாம். 

ஆனால் சூர்யாவுக்கு கமல்ஹாசன், வைகோ, சீமான், இயக்குநர் கே.எஸ் இரவிக்குமார் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். 

இரஜினிகாந்த், ‘சூர்யாவின் இன்னொரு முகம் சில நாள்களுக்கு முன்னர் தெரியவந்தது. புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் சிரமங்களை கண் எதிரே பார்த்தவர் சூர்யா’ என்று தெரிவித்தார்.  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த இரஜினிக்கு சூர்யா நன்றி தெரிவித்தார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,221.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.