Show all

பழ.நெடுமாறன் பாராட்டு: ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக முதல்வர் நிதிக்கு

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவதற்காக ரூ.10 கோடி வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் பழனிசாமிக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவதற்காக ரூ.10 கோடி வழங்க முன்வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுகிறேன். ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் செயற்பட்டு வந்த தமிழ் இருக்கைகள் சில மூடப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் திறப்பதற்கு உதவுமாறு இந்திய அரசை வலியுறுத்துவதோடு தமிழக அரசும் தனது பங்கை செலுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்என பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டார்

-நடுவண் அரசும் தன் பங்களிப்பை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக வழங்க முதல்வர் முயற்சி எடுத்து வரலாற்றில் இடம் பெற வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.