Show all

பேரறிவாளன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி; பலத்த காவல்துறை பாதுகாப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து நடுவண் மாநில அரசுகள் இழுத்தடித்து வருகின்றன. இதனால் 25 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் உள்ளனர்.

      இந்நிலையில், இன்று வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் திடீரென சேர்க்கப்பட்டுள்ளார். எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த காரணம் இன்னும் வெளியாக வில்லை. அதே நேரத்தில் மருத்துவமனையைச் சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சிறையில் இருந்த சக கைதி ராஜேஷ் கண்ணா என்பவரால் இரும்பு கம்பி கொண்டு பேரறிவாளன் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இதே வேலூர் அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 6 தையல்கள் தலையில் போட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.